• Fri. Feb 14th, 2025

நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம்..!

Byவிஷா

Nov 22, 2023

நெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை மாநகராட்சி திமுக கைவசம் உள்ளது. மொத்தமுள்ளஎ 55 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளை திமுக கைப்பறியதால், திமுக அதிகாரம் கொடிகட்டி பறக்கிறது. இதனால், மற்ற கட்சிகளைச் சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் பல ஆளுங்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் புறக்கணிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனால், மாநகராட்சி மன்ற கூட்டத்தின்போது, ஆளுங்கட்சி மாமமன்ற உறுப்பினர்கள்,, மேயருக்குமிடையே மோதல் ஏற்பட்டு வருகீறது. இதனால் மக்கள் பணிகள் தடை படுகிறது.
இந்த நிலையில், நெல்லை மாநகராட்சியில் வாரந்தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் முகாமில் மனு கொடுப்பதற்காக ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் 20 பேர் வந்திருந்தனர். ஆனால் முகாமில் மேயர், துணை மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையர் இல்லாததால் ஆத்திரமடைந்த கவுன்சிலர்கள் மனுவுடன் மாநகராட்சி அலுவலகத்தின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிருப்தி கவுன்சிலர்கள், தங்களது வார்டுகளில் குடிநீர் பிரச்சினை, சாலை பிரச்சனை உட்பட மக்களின் பிரச்சினைகள் ஏராளமாக உள்ளது. ஆனால், இதை சரி செய்ய மேயர் அனுமதி வழங்குவதில்லை என்றவர், மேயர் கவுன்சிலர்களை மதிக்காமல் நடந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டினர். தொடர்ந்து, மேயருக்கு எதிராக கவுன்சிலர்கள் கண்டன கோஷம் எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த மாநகராட்சி உதவி ஆணையர் தானுமூர்த்தி போராட்டத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆளுங்கட்சியை சேர்ந்த நீங்களே போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல என்றார். அப்போது ஆணையர் உடனே இங்கு வரவேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர், தொடர்ந்து உதவியாளர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவரது அழைப்பை ஏற்று கவுன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டு உள்ளே பேச்சுவார்த்தைக்கு சென்றனர்.