• Fri. Jun 28th, 2024

அரசியல்டுடே துணுக்குகள்

Byதரணி

Jun 20, 2024

J𝐔𝐒𝐓 𝐍𝐎𝐖

✍️20::06:24 கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விசா சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு.

✍️கள்ளச்சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்ற கன்னுக்குட்டியை கைது செய்து 200 லிட்டர் கள்ளச்சாரயம் பறிமுதல் செய்யப்பட்டது சாராயத்தில் மெத்தனால் கலந்ததே உயிரிழப்புக்கு காரணம் என அமைச்சர் எ. வ. வேலு தகவல்.

✍️நேற்று இரவு உடல் பரிசோதனை முடிந்து 11 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

✍️மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்த அரசு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டது.

✍️விசச்சாராயம் குடித்தவர்களில் சிகிச்சைக்காக 94 பேர் மருத்துவமனையில் அனுமதி அவர்களில் 5 பேர் நிலைமை கவலைக்கிடம் மருத்துவமனையில் சிகிச்சைகளை உள்ளவர்களை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் நேரில் சந்தித்து கூடுதல் மருத்துவ உதவிகள் தேவையா என கேட்டு அறிந்தார்.

✍️20::06:24 கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை

✍️சட்டப்பேரவையின் இன்றைய அலுவல் கூட்டம் முடிந்தபின் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

✍️ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் முத்துச்சாமி ,எ .வ வேலு பொன்முடி ,மற்றும் காவல் துறை டிஜிபி உளவுத்துறை டிஜிபி உயர் அதிகாரிகள் உள்ளனர் டிஜிபி மதுவிலக்கு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *