தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் என்றால் அது சினேகா மற்றும் பிரசன்னாவாக தான் இருக்க முடியும்.
இவர்களுக்கு விஹான் என்ற மகனும் ஆத்யாந்த என்ற மகளும் உள்ளார்கள். இவர்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெறும்.இதனிடையே தற்போது சினேகா அவரின் கணவர் பிரசன்னா மற்றும் தனது குடும்பத்துடன் பழனி மலைக்கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.அப்போது கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கோவில் வளாகத்திலேயே சற்று நேரம் அவர்கள் அமர்ந்திருந்தனர்.
அதன் பிறகு வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர், அவர்கள் தரிசனம் முடிந்து வந்த பின் ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர்.