• Tue. Jul 21st, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

ரேஷன் அரிசி கடத்தல்.., கும்பலை பிடிக்க மாவட்ட போலீஸ் ஹரிகிரண் பிரசாத் உத்தரவு….

கன்னியாகுமரியில் இருந்து கேரளாவுக்கு அடிக்கடி ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது. ரேசன் அரிசி கடத்தும் கும்பலை பிடிப்பதற்காக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் இரவு நேரங்களில் தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கன்னியாகுமரியை அடுத்த கோவளம் பகுதியில் இருந்து சொகுசு காரில் கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கன்னியாகுமரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார் கேரள பதிவு எண் கொண்ட ஒரு சொகுசு கார் மற்றும் ஒரு இரு சக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 பேர் நின்று கொண்டிருப்பதை பார்த்தனர். போலீசாரை கண்டதும் சொகுசு கார் மற்றும் இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு அவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
காரை போலீசார் சோதனை செய்தபோது அதில் 1½ டன் ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கார் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தப்பி ஓடிய அந்த 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.