• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அரசு தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு கண்காட்சி..!

Byவிஷா

Oct 11, 2023

கரூர் மாவட்டம், க.பரமத்தி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 200க்கும் மேற்பட்ட வகையிலான சிறுதானிய உணவு கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
சிறுதானியங்கள் மீது கவனத்தை ஈர்க்க, 2023ம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்தது. இந்த நிலையில் கரூர் மாவட்டம் க.பரமத்தி பகுதியில் அமைந்துள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சிறுதானிய உணவு திருவிழா கண்காட்சி நடைபெற்றது. இதை முன்னிட்டு 272 சிறுதானிய உணவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கம்பு சேமியா, ராகி புட்டு, எள் உருண்டை, குதிரைவாலி பொங்கல், சுண்டல், பாசிப்பயிறு பாயசம், நிலக்கடலை லட்டு, கொள்ளு சுண்டல் உள்ளிட்ட சிறுதானியங்களைக் கொண்டு சமைக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஏராளமானோர் சிறுதானிய உணவான மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, சிறு தானியங்கள் உண்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுவது குறித்து அறிந்து கொண்டனர். சின்னஞ்சிறு குழந்தைகள் உண்ண வேண்டிய ஆரோக்கியமான உணவுகள் குறிப்பாக சிறுதானிய உணவுகள், குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். மாணவர்கள் ஆச்சரியத்துடன் கண்காட்சியை பார்வையிட்டும் உணவுகளை அருந்தி, மாணவர்கள் குறிப்புகள் எடுத்து சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் நீலகண்டன், வட்டார கல்வி அலுவலர் அசோகன்,பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வ கண்ணன், ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் கூறுகையில்: பள்ளியில் சிறுதானியங்களை கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் சிறுதானிய உணவுகள் முக்கியத்துவங்களை விலக்கப்பட்டது இதில் நெருப்பு இல்லாமல் ஏழு வகையான சிறு தானியங்களை சமையல் செய்துள்ளனர், சிறுதானியத்தின் நன்மைகள் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்வத்துடன் இருப்பது பெருமையாக உள்ளது. நடைபெற்ற சிறுதானிய படைப்புகளை 500க்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். சிறுதானிய உணவுகளை சாப்பிடுவதால் நமது ஆயுள் காலம் அதிகரிக்கும் என்றார்.