• Sat. Jan 3rd, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆயுத பூஜையையொட்டி சிறுதொழில் மீனவர்கள் தங்களது படகுகளுக்கு பூஜை!..

ஆயுத பூஜையையொட்டி ராமேஸ்வரம் நாட்டுப்படகு மற்றும் தெர்மாகோலில் மீன்பிடிக்கும் சிறுதொழில் மீனவர்கள் தங்களது படகுகளுக்கு பூஜை செய்து பிரசாதம் கொடுத்தனர்.

விஜயதசமி நாளான இன்று ஆயுதபூஜை விழா தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ராமேஸ்வரம் அடுத்த ஓலைக்குடா, சங்குமால் பகுதிகளில் உள்ள மீனவர்கள் தங்களது படகளுக்கு மா இலை, வாழை தோரணம் கட்டி தங்களது படகுகளை அலங்கரித்து படகுகளுக்கு பூஜை செய்தனர். பின்னர் பழம்கள், பெரி கடலையை பிரசாதம் வழங்கினர்.

அதேபோல் தெர்மாகோலில் சென்று சிறு தொழில் செய்யும் மீனவர்களும் தங்களது தெர்மாகோலில் இருபுறமும் வாழை இலை கட்டி கடலில் சிறிது தூரம் சென்று பூஜை செய்தனர். மீனவர்கள் தெர்மாகோலுக்கு அலங்கரித்து பூஜை செய்ததை அப்பகுதி மக்கள் பார்த்து ரசித்தனர்.