• Wed. Apr 23rd, 2025

ரேஷன் கடை மீண்டும் உடைத்த யானை உறங்கிக்கொண்டிருந்த இளைஞர்கள் உயிர்தப்பினர்…

ByG. Anbalagan

Apr 1, 2025

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டத்துக்கு உட்பட்ட தொரப்பள்ளி, கூடலூர்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள இப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாட்டம் இருக்கும். காலை மாலை நேரங்களில் வனத்தில் இருந்து வெளியேறிய யானைகள், தேசிய நெடுஞ்சாலையில் நடமாடுவது வழக்கமாகிவிட்டது.

இந்த நிலையில் கடந்த வாரம் தொரப்பள்ளியில் உள்ள ரேஷன் கடைக்கு சென்ற யானை ரேஷன்கடையின் ஷட்டரை உடைத்து, கடைக்குள் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட ரேஷன் பொருட்களை சூறையாடியது. அரிசியை ருசி பார்த்த பின், யானை அங்கிருந்து சென்றது.

இந்த காட்சியை பலர், வீடியோ பதிவு செய்து சமூக வலை தளங்களில் பதிவிட்டனர். ரேஷன் கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் இக்காட்சி பதிவாகி யிருந்தது. பகல் நேரத்திலேயே வனத்திலிருந்து யானை வெளியேறி ரேஷன் கடையை சூறையாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் கூடலூர் தொரப்பள்ளி ரேஷன் கடையை மீண்டும் உடைத்த யானையின் சி.சி.டிவி காட்சிகள் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

இதன் அருகில் உறங்கிக்கொண்டிருந்த இளைஞர்கள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.