

கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று ஆறாவது கட்ட தடுப்பூசி சிறப்பு முகாம் துவங்கியது. இதில் ஆட்டோ மூலமாக வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தமிழக தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் 52 வார்டுகளுக்கு 52 ஆட்டோக்கள் மூலம் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடப்படுகிறது. ஒரு ஆட்டோவில் மூன்று நர்சுகள் தடுப்பூசி போட பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில்”
மாவட்டத்தில் இதுவரை 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது மீதமுள்ள நபர்களுக்கு வரும்காலங்களில் விரைந்து தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தார், அதேபோல் வீடுதேடி தடுப்பூசி ஆட்டோவில் வருகிறது பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்,
மேலும் தடுப்பூசி செலுத்திய அதிஷ்டசாலிகள் 22 பேருக்கு தங்க நாணயம் பரிசு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் எத்தனை சதவீத கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தியது, தற்போது நடைப்பெறும் திமுக ஆட்சியில் எத்தனை சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்ற விகிதத்தை பார்த்தால் தமிழகத்தில் பாஜக 100கோடி தடுப்பூசி கொண்டாட்டத்திற்கான பதில் கிடைக்கும் என கேள்வி எழுப்பினார்.
