• Wed. May 8th, 2024

குளச்சலில் விசைப்படகு மீது பனாமா நாட்டுச்சரக்கு கப்பல் மோதி விபத்து…

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் இருந்து ஆழ் கடலில் மீன் பிடிக்கக் சென்ற விசைப்படகு மீது பனாமா நாட்டு சரக்கு கப்பல் மோதி படகு உடைந்து மீனவர்கள் காயம். 17 மீனவர்களில் 2 பேர்களை இந்திய கடலோர காவல்படை கேரளாவில் கொச்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர் – மீதமுள்ள 15 மீனவர்களும் குளச்சல் வந்து சேர்ந்தனர். மோதிய கப்பலும் ஆழ் கடலில் இந்திய கடலோர காவல்படையினர் சிறைபிடித்து உள்ளனர்.


தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணி என்பவர் சர்ச்சில் விசைப்படகு மீது மோதி விபத்து ஏற்படுத்திய பனாமா நாட்டு நேவியஸ் வீனஸ் சரக்கு கப்பல் மீது நடவடிக்கை எடுக்கவும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கும், விசைப்படகுக்கும் உரிய நிவாரணம் பெற்றுத் தரவும் மாநில மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.


கன்னியாகுமரி மாவட்டம் கொட்டில்பாட்டை சார்ந்த ராஜமணி என்பவருக்கு சொந்தமான சிஜுமோன் விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சார்ந்த ஆண்ட்ரூஸ் மகன்கள் ரூபன் ரோஸ், தீபன் ரோஸ்; லூகாஸ் மகன் வில்சன், மனுவில் பிள்ளை மகன் ஜான் பாஸ்கோ, போத்தீஸ் மகன் வினோ, லியோன்ஸ் மகன் லிபின், குப்புசாமி மகன் சின்னதுiர் கொட்டில் பாட்டை சார்ந்த அந்தோணி பிச்சை மகன் தினேஷ்குமார், ராஜ் மகன் ராகுல், சகாயம் மணி மகன் அபினேஷ்; குறும்பனை சார்ந்த யூஜின் மகன் அஜிஸ்; புதூரை சார்ந்த மரஸ்லின் மகன் சீலன்; மேல மனகுடியை சார்ந்த பங்கிராஸ் மகன் அருள்ராஜ், ஜெர்மன் மகன் ரிஜாஸ் ஆண்டனி ஆரோக்கியபுரத்தை சார்ந்த அகஸ்டின் மகன் ஏசுதாசன் மற்றும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த நேபால் மகன் தீபன் சுகர், அருண் மகன் பிதான் ஆகிய 17 மீனவர்களும் 22.10.2020 நேற்று குமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து சுமார் 19 கடல் மைல் தொலைவில் மீனவர்களது விசைப்படகு சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று சிங்கப்பூரில் இருந்து மும்பைக்கு சென்றுகொண்டிருந்த பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட நேவியாஸ் வீனஸ் என்ற சரக்குக் கப்பல் மீனவர்களின் விசைப்படகு மீது வேகமாக மோதியது. இதில் மீனவர்களது விசைப்படகு பெருத்த சேதம் ஏற்பட்டதோடு, விசைப் படகில் இருந்த மீனவர்கள் தூக்கி வீசப்பட்டு உள்ளனர். இதில் மேல் மனகுடியை சார்ந்த அருள்ராஜ் மற்றும் குளச்சல் சார்ந்த ஜான் ஆகியவர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர். மற்ற மீனவர்கள் சிறு காயங்களுடன் தப்பி உள்ளனர். படகை ஒட்டிக்கொண்டிருந்த ரூபன் ரோஸ் என்ற மீனவர் உடனடியாக இந்திய கடலோர காவல் படைக்கு வயர்லெஸ் மூலம் தொடர்பு கொண்டு தங்கள் விசைப்படகு மீது கப்பல் மோதி விபத்து ஏற்படுத்தியது எனத் தெரிவித்துள்ளார்.


உடனே இந்திய கடலோர காவல் படை விரைந்து வந்து பலத்த காயமடைந்த மீனவர்கள் ஜான் மட்டும் அருள்ராஜ் ஆகியோரை கடலோர காவல்படைக்கு சொந்தமான கப்பல் மூலம் கேரளா மாநிலம் கொச்சின் கப்பல் துறைமுகத்திற்கு கொண்டு சேர்த்து மருத்துவமனையில் சிகிற்சைகாக சேர்க்கபட்டனர் விபத்து ஏற்படுத்திய சரக்கு கப்பலை விசாரணைக்காக கொச்சின் கப்பல் துறைமுகத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். விபத்துக்குள்ளான மீனவர்களது விசைப்படகில் இருந்த மற்ற 15 மீனவர்களையும் சக மீனவர்களது விசைப்படகு மீட்டு குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கரை சேர்த்துள்ளனர்.


இதுபோன்ற கப்பல் விபத்து இந்திய கடலோர பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கீழ்காணும் கோரிக்கைகளை தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணி சர்ச்சில் அவர்கள் அரசின் பார்வைக்கு முன்வைத்துள்ளார்.
விசுவல்:

  1. குளச்சல் மீன் பிடி துறைமுகம்.
  2. ஆழ் விபத்துகுள்ளான விசைபடகு காட்சிகள். மற்றும் புகைபடங்கள்.
  3. பேட்டி அருட்பணியாளர் சர்ச்சில் ( பொது செயலாளர் – தெற்காசிய மீனவர் தோழமை – குளச்சல் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *