• Mon. Apr 6th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சிவசங்கர் பாபாவுக்கு நிபந்தனை ஜாமீன்..

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சுசில் ஹரி பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இதனையடுத்து,தனக்கு இதய கோளாறு உள்ளிட்டவைகள் இருப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில்,மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவிற்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவசங்கர் பாபாவிற்கு எதிராக எட்டு வழக்குகள் உள்ள நிலையிலும்,சிவசங்கர் பாபா வெளியே வந்தால் சாட்சியங்களை கலைத்து விடுவார் என்பதால் அவருக்கு ஜாமீன் வழங்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்த நிலையிலும் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

எனினும்,பாலியல் வழக்கில் தொடர்புடைய பள்ளி வளாகத்துக்குள் சிவசங்கர் பாபா நுழையக் கூடாது எனவும்,புகார் கொடுத்தவர்களை சிவசங்கர் பாபாவின் ஆதரவாளர்கள் தொந்தரவு செய்யக்கூடாது,குறிப்பாக சாட்சியங்களை கலைக்க முயன்றால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என உச்சநீதிமன்றம் கடுமையான நிபந்தனையை விதித்துள்ளது.