• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மாவீரனாக களம் கான இருக்கும் சிவகார்த்திகேயன்…

Byகாயத்ரி

May 21, 2022

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர். இவர் தமிழ் சினிமாவில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர். இவரின் நடிப்பில் வெளியான டான் திரைப்படம் வெற்றி பெற்று ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இவர் தற்போது அயலான், சிங்கப்பாதை, எஸ்கே 20 போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் எஸ்கே21 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். ஈப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பெயர் குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு “மாவீரன்”என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.