• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

சூர்யாவுடன் இணைந்த சிவகார்த்திகேயன்

Byமதி

Nov 20, 2021

சூர்யா – பாண்டிராஜ் கூட்டணி தற்போது உருவாகி வரும் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’. பிரியங்கா மோகன், திவ்யா துரைசாமி, சத்யராஜ், சரண்யா உள்பட பலர் நடிக்க, டி.இமான் இசையமைக்கிறார். சன் பிக்சரஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று எதற்கும் துணிந்தவன் படத்தின் ரிலீஸ் குறித்து ஒரு அப்டேட் வெளியிட்டது அப்படக்குழு. பிப்ரவரி 4 ஆம் தேதி படம் வெளியாவதை உறுது செய்த படக்குழு, அந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதற்கு காரணம் இந்த படத்தில் ஒரு பாடல் எழுதி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கு முன்பு பல்வேறு படங்களில் ஒரு சில பாடல்களை எழுதியுள்ள சிவகார்த்திகேயன், சமீபத்தில் டாக்டர் படத்திற்காக இவர் எழுதிய செல்லம்மா பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த நிலையில், சூர்யாவின் இந்த படத்திற்கும் ஒரு பாடல் எழுதி இருக்கிறார். விரைவில் இந்த பாடல் வெளியிடப்பட உள்ளது என படக்குழு அறிவித்துள்ளது.