தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக கூட்டு குடிநீர் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் தடைப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் தற்போது பெய்துவரும் பருவமழை காரணமாக பாலாறு மற்றும் கௌடண்ய ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக காவேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீர் தடைப்பட்டுள்ளது.
மேலும் பசுமாத்தூர் தலைமை நீரேற்று நிலையம் மூலம் விநியோகிக்கப்படும் பாலாறு குடிநீர் திட்ட குடிநீர் குழாய்கள் மற்றும் கிணறுகள் பாலாற்று வெள்ளத்தினால் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் வரும் பத்து நாட்களுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்படையும் சூழ்நிலை உள்ளது.எனவே பொதுமக்கள் நகர்ப்பகுதியில் உள்ள சிறுமின்விசை பம்புடன் கூடிய ஆழ்துளை கிணறுகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் குடிநீர் விநியோகம் செய்ய இயலாத பகுதிகளுக்கு நகராட்சி குடிநீர் வாகனம் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படும் எனதெரிவித்துக்கொள்ளபப்டுகிறது.
இக்காலக்கட்டத்தில் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.வடக்கிழக்கு பருவமழை காலங்களில் குடிநீரை காய்ச்சி பருகுமாறு குடியாத்தம் நகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.