• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டம்

ByG.Suresh

Aug 17, 2024

புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் நீதி கேட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடி மாவட்ட அரசு மருத்துவமனை மற்றும் 18 அரசு மருத்துவமனைகள், 52 ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரிந்த மருத்துவர்கள் நேற்று கருப்பு அட்டை அணிந்து பணிபுரிந்தனர்.

இந்நிலையில் இன்று காலை புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் என 2,00-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தேசிய மருத்துவர் மற்றும் மருத்துவமனை பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்துவது, அரசு மருத்துவமனைகளில் இரவில் மருத்துவர்கள் தங்குமிடங்களில் போதிய வசதி, பாதுகாப்பு ஏற்படுத்த வலியுறுத்தினர்.