• Wed. May 1st, 2024

சீரொளி இடுக்கியின் தந்தை ஆர்தர் ஆசுக்கின் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 2, 1922)…

ByKalamegam Viswanathan

Sep 2, 2023

ஆர்தர் ஆசுக்கின் (Arthur Ashkin) செப்டம்பர் 2, 1922ல் நியூயார்க்கின் புரூக்கிலின் பகுதியில் பிறந்து அங்கேயே வளர்ந்தார். இவருடைய பெற்றோர்கள் இசடோர் ஆசுக்கின், அன்னா ஆசுக்கின் ஆவர். தந்தை இசடோர் ஒடெசாவில் (உக்ரைனில்) இருந்து, தனது 18-வது அகவையில் அமெரிக்காவுக்குக் குடி பெயர்ந்தார். தாயார் அன்னா உக்ரைனில் இருந்து குடிபெயர்ந்தவர் ஆவார். ஆர்தர் ஆசுக்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் படித்தார். அதே நேரத்தில் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு ஆய்வுக்கூடத்தில் தொழினுட்ப உதவியாளராகவும் இருந்தார். இப்பொறுப்பில் இருந்தபொழுது அமெரிக்கப் படைத்துறைக்கான இரேடார் என்னும் தொலைபொருளுணர்விக் கருவிக்கான நுண்ணலை தோற்றிவிக்கும் காந்தக் கருவியைச் செய்யப் பணித்தார்கள். இவர் பட்டப்படிப்பில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்காக இருந்தாலும், இப்பொறுப்பு இவருக்கு வழங்கப்பெற்றது. இவ்வாய்ப்பின் பயனாக மூன்று நோபல் பரிசாளர்களை அவர் சந்திக்க நேர்ந்தது.

ஆர்தர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படிப்பு முடிந்த பிறகு, கார்ணெல் பல்கலைக்கழகத்தில் மேற்பட்டப் படிப்பு படிக்கச் சென்றார். அங்கே அணுக்கருவியியல் துறையில் படித்தார். அக்காலத்தில் மான்ஃகாட்டன் திட்டம் என்னும் அணு ஆயுதத் திட்டத்திற்கான பணிகள் நடந்து வந்தன. அதில் இவருடைய உடன்பிறந்தார் சூலியசு ஆழ்சுகின் பங்களிப்பவராக இருந்தார். இத்தொடர்பால் ஆர்தர் ஆழ்சுகினுக்கு நோபல் பரிசாளர் ஃகன்சு பெத்து (Hans Bethe) அவர்களுடனும் ரிச்சர்டு ஃபெயின்மன் (Richard Feynman) அவர்களுடனும் இன்னும் கார்ணெல் பல்கலைக்கழகத்துக்கு வருவோரிடமும் தொடர்பு ஏற்பட்டது. ஆர்தர் கார்ணெல் பல்கலைக்கழகத்தில் முனைவர்ப் பட்டம் பெற்ற பின்னர் பெல் ஆய்வுக்கூடத்தில் இவருடைய நெறியாளராக இருந்த சிட்னி மில்மன் அவர்களின் பரிந்துரையின் பேரில் பணிக்குச் சென்றார்.

பெல் ஆய்வுக்கூடத்தில் 1960 முதல் 1961 வரை நுண்ணலைத் துறையில் பணி புரிந்தார். பின் சீரொளித் திறையில் ஆய்வை மேற்கொண்டார். இவர் ஒளிநார், நேர்சார்பிலா ஒளியியல், பராமெற்றிக்கு அலைவி, பராமெற்றிக்கு மிகைப்பி ஆகிய துறைகளில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார். பெல் ஆய்வுக்கூடத்தில் இருந்தபொழுது தகைவுமின்விளைவுப் படிகம் (piezoelectric crystal), ஒளிமுறிவு விளைவு ஆகிய துறைகளிலும் புது கண்டுபிடிப்புகள் செய்தார். ஆர்தர் பணியானது 1997 ஆம் ஆண்டு இயற்பியல் நோபல் பரிசு பெற்ற இசுட்டீவன் சூ அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்தது. சூவின் ஆய்வில் சீரொளியால் அணுக்களைக் குளிர்விப்பதும் சிக்கவைப்பதும் முக்கிய பங்கு வகித்தன. ஆசுக்கின் 1960-களின் கடைசியில் சீரொளியைக் கொண்டு சிறு துகள்களைப் பிடித்துக் கட்டுப்படுத்துவதைச் செய்தார். இதன் விளைவாக 1986 இல் சீரொளி இடுக்கிகள் அல்லது ஒளியிடுக்கிகள் (optical tweezers) என்னும் மிக நுட்பமான கருவியைக் கண்டுபிடித்தார். இதன் பயனாய் தனி அணுக்களையும், சிறு மூலக்கூறுகளையும் உயிரணு முதலான உயிரியப் பொருட்களையும் சீரொளி இடுக்கியில் சிக்க வைத்து அலச முடிகின்றது. இதற்கு அடிப்படையாக இருக்கும் இயற்பியல் விளைவு ஒளியின் அடர்த்தி வேறுபாட்டால் எழும் மிக நுட்பமான கதிராற்றல் அழுத்தவேறுபாடு ஆகும்.

ஆசுக்கின் இந்த உயர்நுட்ப சீரொளி இடுக்கியின் தந்தை எனக் கருதுகின்றார்கள். இக்கண்டுபிடிப்புக்காகத்தான் 2018 ஆம் ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பெற்றது. நோபல் பரிசு பெற்றவர்களிலேயே இவர்தான் அகவை (96 வயதில்) கூடியவர் ஆவார். ஆர்தர் ஒளியியல் குமுகத்தின் சிறப்பாளராகவும், அமெரிக்க இயற்பியல் குமுகத்தின் சிறப்பாளராகவும் , ஐ.இ.இ.இ நிறுவனத்தின் சிறப்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 47 புதுக்கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமம் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டு யோசப்பு கீத்திலி விருதும், 2004 இல் ஆர்வி பரிசும் பெற்றார். 1984 இல் அமெரிக்க தேசியப் பொறியியல் அகாதெமியின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய அறிவியல் அகாதெமியின் உறுப்பினராகவும் 1996 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Related Post

“சதி”ஒழிப்பு தினம் தான் இன்று!
SK23 படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்
delhi india அரசியல் அரியலூர் அழகு குறிப்பு ஆன்மீகம் இந்த நாள் இராணிப்பேட்டை இராமநாதபுரம் இலக்கியம் இன்றைய ராசி பலன்கள் ஈரோடு உடனடி நியூஸ் அப்டேட் உலகம் கடலூர் கரூர் கல்வி கவிதைகள் கள்ளக்குறிச்சி கன்னியாகுமரி காஞ்சிபுரம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் சமையல் குறிப்பு சிவகங்கை சினிமா சினிமா கேலரி செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் தமிழகம் தருமபுரி திண்டுக்கல் திருச்சிராப்பள்ளி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவள்ளூர் திருவாரூர் தினம் ஒரு திருக்குறள் தினம் ஒரு விவசாயம் தூத்துக்குடி தெரிந்து கொள்வோம் தென்காசி தொழில்நுட்பம் தேசிய செய்திகள் தேனி நாகப்பட்டினம் நாமக்கல் நீலகிரி படித்ததில் பிடித்தது புகைப்படங்கள் புதுக்கோட்டை பெரம்பலூர் பொது அறிவு – வினாவிடை மக்கள் கருத்து மதுரை மயிலாடுதுறை மருத்துவம் மாவட்டம் லைப்ஸ்டைல் வணிகம் வார இதழ் வானிலை விருதுநகர் விழுப்புரம் விளையாட்டு வீடியோ வேலூர் வேலைவாய்ப்பு செய்திகள் ஜோதிடம் - ராசிபலன்
நீங்க ரெடின்னா நாங்க ரெடி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *