• Fri. Sep 29th, 2023

ஜேக்குவிலைன் எவிட் பிறந்த தினம் இன்று (செப்டம்பர் 4, 1958)…

ByKalamegam Viswanathan

Sep 4, 2023

ஜேக்குவிலைன் எவிட் (Jacqueline Hewitt) செப்டம்பர் 4, 1958ல் வாசிங்டன் டி.சி யில் பிறந்தார். இவரது தந்தையார் வாரன், ஓய்வுபெற்ற மாநிலச் சட்ட்த்துறையின் பன்னாட்டுச் சட்ட வல்லுனர் ஆவார். இவரது தாயார் கெர்ட்ரூட் எவிட் ஆவார். இவர் பிரின் மாவெர் கல்லௌஉரியில் பயின்று 1980ல் பொருளியலில் இளநிலை பட்டம் பெற்றார். பீன்னர் இவர் ஏவர்போர்டு கல்லூரியில் வானியல் வகுப்பொன்றுக்குச் சென்றுள்ளார். இவ்வகுப்பு இவருக்கு அறிவியலில் ஆர்வங்கொள்ள செய்துள்ளது. இவர் பட்டமேற் படிப்பை மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயின்றார். அப்போது இவர் ஈர்ப்பு வில்லைகளை மீப்பெரு அணி கதிரியல் தொலைநோக்கி வழியாக ஆய்வு மேற்கொண்டுள்ளார். ஈர்ப்பலைகள் பேரளவு கதிரியல் அலைகளை வெளியிடுவதால் கதிரியல் தொலைநோக்கியை ஆய்வில் பயன்படுத்த விரும்பியுள்ளார். இந்த ஆய்வுக்கு இவ்வகத் தொலைநோக்கி ஒளியியல் தொலைநோக்கியை விட சால சிறந்ததாகும். இவர் தன் முனைவர் பட்ட்த்தை 1986ல் இயற்பியலில் பெற்றார்.

ஜேக்குவிலைன் எவிட் 1986 முதல் 1988 வரையில் மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் மிகுநீள அடிக்கோட்டு குறுக்கீட்டளவி அணியின் பகுதியாக முதுமுனைவர் ஆய்வுநல்கை வழங்கப்பட்டார். இவர் தனது பட்டமேற்படிப்பு ஆய்வின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும்போது தன் கணினித் திரையில் ஒரு வளையத்தைக் கண்டார். இது இலியோ விண்மீன்குழுவில் அமைந்திருந்தது. இதுவே முதன்முதலாக்க் கண்டறிந்த ஐன்ஸ்டீன் வளையம் ஆகும். இந்த ஆய்வுக்குப் பிறகு பல ஐன்ஸ்டீன் வளையங்கள் கண்டறியப்பட்டன. இவை முன்பு வானியலாளர்கள் கருதியதை விட புடவியில் மிகப் பரவலாக அமைதல் அறியப்பட்டது. இவை புடவியின் அளவையும் இறுதி கதியையும் அறிய உதவுவதால், ஐன்ஸ்டீன் வளையங்கள் மிக முதன்மை வாய்ந்தனவாகும்.

ஜேக்குவிலைன் எவிட் 1988ல் பிரின்சுடன் பல்கலைக்கழகத்தின் வானியற்பியல் துறையில் அறிவியல் ஆராய்ச்சியாளராகப் பணிபுரிந்தார். அங்கு ஒராண்டு ஆய்வுக்குப் பின்னர் உதவி இயற்பியல் பேராசிரியராக மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்துக்குத் திரும்பி வந்து பணியாற்றி 1989ல் இருந்து முழுநேரப் பேராசிரியராக இருந்துவருகிறார். இவர் அங்கு மின்னணுவியல் துறை கதிர்வானியல் குழு ஆய்வகத்தின் முதன்மை ஆய்வாளராகவும் உள்ளார். இவர் 2002ல் இருந்து மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தின் காவ்லி வானியற்பியல், விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் இயக்குநராகவும் உள்ளார்.

எவிட் 1990ல் உலூசைல் பேக்கார்டு அறக்கட்டளையின் ஆய்வுநல்கையைப் பெற்றார். இவரது ஈர்ப்பு வில்லைகளின் பணிக்காக மசாசூசட் சார்ந்த இவரது ஒருசாலை பணியாளர்கள் இவருக்கு 1995-1996 ஆண்டுக்கான அரோல்டு யூகின் எட்கெர்டன் விருது பெற பெயரளித்தனர். இவர் 1995ல் கதிர்வானியல் பணிக்காக மரியா கோயபர்ட் மேயர் விருதைப் பெற்றார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed