• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

எஸ்.ஐ.ஆர் சிறப்பு முகாமை கே. டி. ஆர் ஆய்வு..,

ByK Kaliraj

Nov 30, 2025

விருதுநகர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் எஸ்.ஐ.ஆர் படிவம் நிரப்பும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிவகாசி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட திருத்தங்கல் S.R.N அரசு மேல்நிலைப்பள்ளி,
கலைமகள் மேல்நிலைப்பள்ளி, சத்யாநகர் கலையரங்கம் , VSKD மேல்நிலைப்பள்ளி , தேவமார் மேல்நிலைப்பள்ளி , வேளாங்கண்ணி மாதா மேல்நிலைப்பள்ளி, SHNV ஆண்கள் மேல்நிலைபள்ளி உள்ளிட்ட பல்வேறு வாக்குச்சாவடி மையங்களில்
நடைபெற்று வரும்.

வாக்காளர் பட்டியல் தீவிர சீர்திருத்த முகாம் பணிகளை அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ராஜேந்திரபாலாஜி ஆய்வு செய்து அதிகாரிகளிடம் எஸ்.ஐ.ஆர் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது ஏராளமான அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.