• Tue. Dec 10th, 2024

சிந்தனைத்துளிகள்

Byவிஷா

Aug 3, 2022

• சில உறவுகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால் புரிதலுடன்
பொறுமையும் அவசியமானது.

• தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும்
குற்றம், ஒழுக்கம் உடையார்க்குப் பொருந்தாததாகும்.

• நல்லதே நடக்கும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள்
இறைவனின் மகத்தான சக்தி பெற்று வளம் பெறுவார்.

• உண்மையிலேயே சக்தி குறைந்து விட்டோமோ என்ற உணர்வே
தனி மனிதனையும் சரி, ஒரு நாட்டையும் சரி, மிகவும் பாதித்து விடுகிறது.

• காதலிப்பதிலும் சரி, பழி வாங்குவதிலும் சரி
ஆணை விடப் பெண் ஆவேசமானவள்.
அவள் பழிவாங்க முனைந்து விட்டால் விதியின் கதியும் அதோ கதிதான்,
அவள் தந்திரத்தில் ஆணை மிஞ்சியவள்.

• இந்த மண்ணை நேசியுங்கள், இந்த மண்ணிடம் விசுவாசமாயிருங்கள்
உங்களால் முடிந்தமட்டும் இம்மண்ணுக்கப்பால் ஏதோவொன்று இருப்பதாய்
யாராவது கூறினால் அதை நம்பாதீர்கள்.
இந்த மண்ணைவிட உயர்ந்தது வேறொன்றில்லை.