• சூரியனும் நிலவும் உதிக்காமல் போனால் கூட மண்ணில்
மனித இனம் வாழ்ந்திட வாய்ப்புண்டு.
ஆனால் பணமின்றி ஓரணுவும் அசையாது என்பதே ஏற்கமுடியாத உண்மை.
• பலரின் ஆறாத காயங்களுக்கு காரணம் மனங்கள் மட்டுமல்ல
பணமும் தான்.!
• உயிர் இருக்கும் உறவுகளும் நட்புகளும் கூட உயிரற்று
போகிறது உயிரில்லாத இந்த பணத்தால்.
• இந்த உலகில் உறவுகளை பார்க்க மட்டுமல்ல..
கடவுளை பார்க்க கூட பணம் தேவைப்படுகின்றது.
• பயணம் இல்லாமல் கூட வாழ்க்கை இருக்கலாம்
ஆனால் பணம் இல்லாமல் வாழ்க்கை இல்லை.