• Sat. Apr 20th, 2024

சிந்தனைத் துளிகள்

Byவிஷா

May 24, 2022

• அனுபவம் மெதுவாகத்தான் கற்பிக்கும்.
தவறுகள் அதற்குரிய செலவுகள்.

• தன் பிள்ளைகளுக்கு, பிறர் மீது அன்பு செலுத்த கற்றுக் கொடுப்பதன் ஊடாக தாய், தன் கடமையை செய்து முடிக்கிறாள்.

• மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான்.
இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம்,
மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்.

• கனவுகள் அபத்தமாகத் தோன்றலாம். ஆனால் எப்போதும் அப்படி இருப்பதில்லை. கனவு எண்ணங்கள் அபத்தமானவை அல்ல, நாம் மனநோயாளியாக இல்லாத வரை.

• ஒரு மனிதனுடைய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடைய எண்ணங்களையும் செயல்களையும் ஆராய்ந்தால் போதுமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *