உசிலம்பட்டி அருகே தென்திருப்பதி என அழைக்கப்படும் சிந்துபட்டி வெங்கடாஜலபதி திருக்கோவிலில் 18 ஆண்டுகளுக்கு பின் திருத்தேரோட்டம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சிந்துபட்டி கிராமத்தில் அமைந்துள்ளது. தென் திருப்பதி என அழைக்கப்படும் பழமையான வெங்கடாஜபதி பெருமாள் திருக்கோவில். இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 11 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவின் சிகர நிகழ்வான திருத்தேரோட்டம் 18 ஆண்டுகளுக்கு பின் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

60 அடி உயரமுள்ள திருத்தேருக்கு வர்ணம் பூசப்பட்டு வெங்கடாஜலபதி பெருமாள் சுவாமியை திருத்தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா கோசங்களுடன் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வலம் வந்த திருத்தேரோட்டம், இறுதியில் கோவிலில் நிறைவுற்றது.
இந்த தேர்திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.