
மதுரை மாடக்குளத்தை சேர்ந்த பிரபல சண்டை பயிற்சியாளரும், நடிகருமான எம்.கே.அழகர்சாமி நூற்றாண்டு விழா மதுரை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
சிலம்ப ஆசான் M.K. அழகர்சாமி நினைவு நூற்றாண்டு மலர், மாநில அளவிலான சிலம்ப போட்டிகள் நடைபெற்றது. திருச்சி ,கோவை, சேலம் ,திண்டுக்கல் , ஈரோடு விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் இருந்து சிலம்பப் போட்டிகளில் பங்கேற்ற 300 மாணவர்களுக்கு சான்றிதழ் பரிசு வழங்கப்பட்டது.


தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் குஸ்தி வாத்தியாராகவும், எம் ஜி.ஆருக்கு சண்டைக் காட்சிகளில் (டூப்)மாற்று நடிகராகவும், நடித்து பிரபலம் அடைந்த மதுரை மாடக்குளம் அழகர்சாமி நூற்றாண்டு விழா திருப்பரங்குன்றம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி எம்.எல்.ஏ . பிரபல திரைபட ஸ்டண்ட் நடிகர் பிரகாஷ் மற்றும் மாமன்ற உறுப்பினர் இந்திரா காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.


விழாவில் எம் கே அழகர்சாமியின் நூற்றாண்டு மலர் தளபதி எம்எல்ஏ வெளியிட்டு ஸ்டன்ட் நடிகர் பிரகாஷ் பெற்றுக்கொண்டார். மேலும் அழகர்சாமி நினைவு சிலம்ப பள்ளிகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சிலம்ப பயிற்சியில் தனிநபர் மற்றும் குழு திறமையை வெளிப்படுத்தினர்.


அதனை தொடர்ந்து சிறந்த மாணவ மாணவியர்களுக்கு சான்றிதழ், கேடயம் பரிசு வழங்கப்பட்டது.


