
திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக இருப்பதால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை கண்டித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களுடன் தர்ணா போராட்டம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் பேருந்து நிலையம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு மாற்றாக திருமங்கலம் தெற்குத்தெரு பகுதியில் தற்காலிக பேருந்து நிலையம் கடந்த ஐந்தாம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. தற்காலிக பேருந்து நிலையத்தில் ஏற்கனவே பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், தொடர்ந்து பெய்து வரும் மழையால் திருமங்கலம் பேருந்து நிலையம் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால் பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் பேருந்துகளையும் பேருந்து நிலையத்திற்கு சென்று திரும்ப முடியாத நிலையில் ஓட்டுநர்களும் கடும் அவதி அடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்த நிலையில், பயணிகள் பேருந்து நிலையத்திற்குள் செல்வதை தவிர்த்து, பேருந்து நிலையத்திற்கு வெளியே நின்று பயணம் செய்யக்கூடிய ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று திருமங்கலம் தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்து, சகதி அதிகமாக இருந்த பகுதியில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார், அதிமுக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருடன் தற்காலிக பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அரை மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயக்குமாரிடம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டார். போராட்டத்தில் அதிரடியாக, உறுதியாக நகராட்சி நிர்வாகம் பேருந்து நிலையப் பகுதிகளில் சகதியை அகற்றி மண்கொட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்னைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.., அதிமுக ஆட்சிக்காலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக 20க்கு ஒரு ரூபாய் மதிப்பு வீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் அதையெல்லாம் நாளும் திமுக கட்சியினர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பேருந்து நிலையம் அமைக்கும் முடிவை கைவிட்டதாகவும், மேலும் தற்காலிக பேருந்து நிலையத்தில் உரிய வசதி ஏற்படுத்தித் தராமல் பேருந்து நிலையம் என்று கூறி, வயல்வெளியில் பேருந்துகளை நிறுத்தி செல்வதால் சேறும், சகதியுமாக மாறி மக்கள் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய நிலையில் பேருந்து நிலையம் இருப்பதாகவும், நகராட்சி நிர்வாகம் உடனடியாக சரி செய்ய வேண்டும்.

அப்படி இல்லை என்றால் மக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார். பழைய பேருந்து நிலைய பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். லாப நோக்கத்தோடு அல்லாமல் சேவை நோக்கத்தோடு பேருந்து நிலையத்தினை புனரமைக்க வேண்டும் எனவும், இன்று மாலைக்குள் தற்காலிக பேருந்து நிலையத்தை சரி செய்து தருவதாக கூறியுள்ளார்கள். தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.

