• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

முதல்வர் மனைவியிடம் விருது வாங்கிய சிம்ரன்!

கடந்த 90கள் மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை சிம்ரனுக்கு ‘பவர் ஆஃப் வுமன்’ என்ற விருது சமீபத்தில் அளிக்கப்பட்டது. இந்த விருதை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் வழங்க சிம்ரன் பெற்று கொண்டார்.

இதுகுறித்து நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராமில், ‘துர்கா ஸ்டாலினிடமிருந்து ‘பவர் ஆப் உமன்’ என்ற விருதை பெற்றதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது. அவருடைய எளிமையான தோற்றம் மற்றும் ஆளுமையை நான் எப்போதும் பார்த்து ரசித்து இருக்கின்றேன். இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.