• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சிம்பு மட்டுமா! லைவ் கார்டு என்ட்ரிக்கூட உண்டு!

பிபி அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் புதிய தொகுப்பாளராக கமலுக்கு பதிலாக சிம்பு இணையவுள்ளார். இதுமட்டுமின்றி வைல்ட் கார்ட் சுற்று மூலம் புதிய நபரும் நிகழ்ச்சியில் இணைகிறார்.

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் 5 சீசன்களை கடந்து ரசிகர்களின் அதிகமான ஆதரவில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் பிக் பாஸ் அல்ட்டிமேட் நிகழ்ச்சி தினந்தோறும் 70 நாட்களுக்கு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிப்பரப்பாக உள்ளது. தினந்தோறும் பரபரப்பான நிகழ்வுகளுடன் நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் மற்ற விஷயங்களுக்கு தன்னால் நேரம் ஒதுக்க முடியவில்லை என்று கூறி கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார். இதனை தொடர்ந்து, நடிகர் சிம்பு தொகுத்து வழங்கவுள்ளார். இந்த வாரத்தில் இருந்து அவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக விஜய் டிவி மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஆகியவை தகவல் தெரிவித்துள்ளன. இதுகுறித்த பிரமோக்கள், சிம்புவின் லுக் உள்ளிட்டவை ஷேர் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் வைல்ட் கார்ட் மூலம் என்ட்ரி சதீஷ், சுரேஷ் சக்ரவர்த்தியும் பிக் பாஸ் வீட்டில் நுழையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன!