• Fri. Mar 29th, 2024

சிலம்பரசனுக்கு டாக்டர் பட்டம் அதிர்ச்சியில் கோடம்பாக்கம்

கெளரவ டாக்டர் பட்டம் என்பது குறிபிட்டதுறையில் சாதித்தவர்களுக்கு வழங்கப்படுவது தன்னாட்சி உரிமையுள்ள பல்கலைகழகங்கள் தாங்கள் விரும்பியவர்களுக்கு இந்த அடிப்படையில் கெளரவ டாக்டர் பட்டத்தை வழங்கி வருகின்றன.

இதில் அரசு நிர்வகம் தலையிட முடியாது அதனால்தான் தகுதியற்ற நபர்கள் கூட டாக்டர் பட்டத்தை விலை கொடுத்து வாங்க முடிகிறது இந்த சூழ்நிலையில் சிலம்பரசனுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்க இருப்பதாக வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் நடிகர் ஐசரி கணேஷ் அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் சாதித்த சாதனையாளர்கள் கூட்டமாக இருக்கையில் எந்த அடிப்படையில் சிலம்பரசனுக்குடாக்டர் பட்டம் என விமர்சித்து சமூகவலைதளங்களில் பலரும் கருத்திட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் இதுவரை டாக்டர் பட்டம் பெற்றவர்கள் பட்டியலை பார்க்கலாம்தமிழ்நாட்டின் முதலமைச்சக பொறுப்பு ஏற்பவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவது வழக்கமாகவே ஆகிவிட்டது.

முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆருக்கு அவர் நடிகராக இருந்தபோதே கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது.1974 ஆம் ஆண்டு அரிசோனாவின் உலகப் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றார். பின்னர் சென்னை பல்கலைக்கழகத்திலும் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

சிவாஜி கணேசனுக்கு 1986ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.

கமல் ஹாசன் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் தமிழ் சினிமாவில் பல விருதுகளை வென்று குவித்தவர் கமல்ஹாசன் அவர்களுக்கு 2005 இல் சத்யபாமா பல்கலைக்கழகம் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.

விஜயகாந்த் – கேப்டன் என்று அனைவராலும் அழைக்கப்படும் விஜயகாந்த் அவர்கள் புகழ்பெற்ற நடிகராகவும் அரசியல்வாதியாகவும்விளங்குகிறார்.இவருக்கு 2011ஆம் ஆண்டு ப்ளோரிடாவில் சர்வதேச சர்ச் மேனேஜ்மென்ட் நிறுவனம் டாக்டர் பட்டம் அளித்தது.

சின்னி ஜெயந்த்- புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞரான சின்னி ஜெயந்த் அவர்கள் நடிப்பு, குரல் மாற்றம், நாடகம் மற்றும் சமூக சேவை துறையில் இவர் மேற்கொண்ட முயற்சியை பாராட்டி 2013ஆம் ஆண்டு சிறந்த சர்வதேச மாற்று மருத்துவப் பல்கலைக்கழகத்தால் இவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கப்பட்டது.

நாசருக்கு 2016 ஆம் ஆண்டு மே7 அன்று வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

பிரபுவுக்கு 2011ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

விஜய்க்கு 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் மாநாட்டில் தனது பன்முக திறமைகளுக்காக டாக்டர் பட்டம் பெற்றார்.

விக்ரமுக்கு இத்தாலியில் உள்ள மிலன் பல்கலைக்கழகம் . 2011ம் ஆண்டு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது.

விவேக்குக்கு 2015ஆம் ஆண்டு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *