சென்னை அண்ணா பல்கலை மாணவி பலாத்கார வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கும், முக்கிய தலைகளுக்கும் தொடர்பிருக்கிறதா என்பதில் தேசிய மகளிர் ஆணைய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஙஇந்த குற்றப்பின்னணியில் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் தொடர்பிருப்பதாக ஆணையத்திடம் சொல்லப்பட்டிருக்கிறது. கைது செய்யப்பட்ட குற்றவாளி ஞானசேகரனுக்கும் பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு கடந்த 6, 7 வருடங்களாகவே நல்ல நட்புறவு இருந்து வருகிறது என்றும், பாதிக்கப்படுபவர்கள் புகார் கொடுத்தால் அதன் மீது நிர்வாகத் தரப்பில் ஆக்சன் எடுக்கப்படுவதில்லை என்றும், அதனாலேயே ஞானசேகரனின் பாலியல் சீண்டல் தொடர்ச்சியாக நடந்து வருவதையும் மகளிர் ஆணையத்திடம் தகவல்கள் தந்துள்ளனர்.
இதற்கிடையே, பல்கலையின் வேந்தராக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இருப்பதால் அவரையும் சந்தித்தது மகளிர் ஆணையம். அந்த சந்திப்பில், தங்களுக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சில விசயங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டபோது, அதனை ஆமோதித்த கவர்னர், தனது விசாரணையில் கிடைத்த தகவல்களையும் பகிர்ந்துகொண்டதுடன், நடந்துள்ள சம்பவம் குறித்து அதிர்ச்சியையும் வெளிப்படுத்தினாராம் யார் அந்த சார்?:
ஏற்கனவே சென்னை முழுவதும் அதிமுக சார்பில் யார் அந்த சார்? என்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் சார் ஒருவரிடம் பேசியதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில்.. யார் அந்த சார்? என்று கேட்டு அதிமுக சார்பாக போஸ்டர் அடிக்கப்பட்டு உள்ளது.
சென்னை அண்ணா பல்கலை. மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் கைதான ஞானசேகரனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அந்த மாணவியுடன் தொடர்பில் இருந்த மற்றொரு நபர் யார் என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் பதிவு செய்துள்ள எப்ஐஆரில்.. அந்த ஆள் தனியாக செய்யவில்லை என்று பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளாராம். அதோடு ஆடி காரில் ஒருவர் வந்ததாக கூறி உள்ளார். இதெல்லாம் போக.. உன்னுடைய வீடியோவை.. வைத்து இனி உன்னை அழைப்பேன். நீ வர வேண்டும். உன்னை ஒரு சாரிடம் கூட்டி செல்வேன். நீ ஒத்துழைக்க வேண்டும். நீ சார் ஒருவருடனும் இருக்க வேண்டும். தயாராக இரு என்று கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது.
அந்த சார் யார்… அந்த சார் யார்.. அவர் பல்கலையில் வேலை செய்பவரா.. இல்லை வெளியே இருக்கும் ஏதாவது ஒரு சாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
தேசிய மகளிர் ஆணைய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
