நிலக்கரி பற்றாக்குறை, விலை உயர்வு; அதிகரிக்கும் மின் உற்பத்தி செலவு: மின்கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு ஒப்புதல் அளித்திருப்பாத தகவல் வெளியாகயுள்ளது.
கரோனா பாதிப்பிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதாலும் கோடைகாலம் தொடங்கியுள்ளதாலும் மின்தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் மின்சாரத் தேவை கடந்த ஆண்டை விட 15சதவீதத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
நிலக்கரிக்கு உலகம் முழுவதுமே தேவை அதிகரித்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி உக்ரைன்- ரஷ்ய போருக்குப் பிறகு நிலக்கரி உட்பட எரிபொருளின் விலையும் கடுமையாக உயர்ந்து வருகிறது.இந்தியாவின் மின்சாரத் தேவையில் பெரும்பகுதி அனல் மின் நிலையங்கள் மூலமாகவே நிறைவேற்றப்படுகிறது. இந்தியா முழுவதுமுள்ள அனல் மின் நிலையங்களில் நிலக்கரி கையிருப்பு குறைந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.டிசம்பர் 2022 வரை கூடுதல் செலவில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின்சாரத்திற்கான கட்டணத்தை நுகர்வோரிடம் இருந்து வசூலிப்பதற்கு கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிகிறது.
எனவே வரும் மாதங்களில் மின்சார கட்டணம் ஷாக் அடிக்கும் என எதிர்பார்க்கலாம்.