• Sat. Apr 27th, 2024

வாயை கொடுத்து மாட்டி கொண்ட பாக்யராஜ்..கொந்தளித்த மாற்று திறனாளிகள்

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிப்பவர்கள் குறை பிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனரும் நடிகருமான பாக்கியராஜ் கூறியது சர்ச்சையான நிலையில், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று அவர்சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி என சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. பிரதமரின் மக்கள் நலத்திட்டங்கள் – புதிய இந்தியா 2022″ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது.இந்த நிகழ்வில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நூலை வெளியிட, திரைப்பட இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் பெற்றுக்கொண்டார்.

இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ்,”பிரதமரின் திட்டங்கள் குறித்த இந்த புத்தகத்தை பெறுவதை நான் பாக்கியமாக கருதுகிறேன். பிரதமரை வெளிநாடு செல்கிறார் என குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இத்தனை நாடுகளுக்கு ஓய்வில்லாமல் எப்படி செல்கிறார் ? அவர் உடலை எப்படி வைத்துக் கொள்கிறார் என பார்ப்பேன்.

இந்தியாவுக்கு இப்படி எனர்ஜியான பிரதமர் தான் தேவை. இக்கட்டான சூழல் வரும் போது சமாளிப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். எப்படி சென்றாலும் விமர்சனங்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என நினைத்துக்கொள்ளுங்கள். இத்தகையவர்களை போன்றவர்கள் நல்லவற்றையும் பேசமாட்டான், பிறர் சொல்வதையும் கேட்க மாட்டார்கள். பிரதமர் மோடியின் பெயர் மக்கள் மனதில் எழுதப்பட்டுள்ளது” என பேசினார்.ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா பேசியது சர்ச்சையான நிலையில், தற்போது குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என இயக்குனர் பாக்கியராஜ் பேசியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று அவர்சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி என சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மனவளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வலி ! அக்குழந்தைகளின் பெற்றோர் வலி தெரியுமா நடிகர் பாக்கியராஜ் அவர்களே? அரசியல் எதிரிகளை விமர்சிப்பவர்கள், குறைபிரசவத்தில் பிறந்தவர்கள் என்று நீங்கள் சொல்வது ஊனமுற்றோரின் இயலாமையை கைக்கொண்டு அதை குறைத்து பேசி, அரசியல் ஆதாயம் காணும் முயற்சி, நாங்கள் இயற்கையின் அங்கமில்லையா? எங்களுக்கும் மான உணர்ச்சி உண்டு ஐயா! தொடர்ந்து அரசியல்வாதிகள் புண்படுத்துகிறார்கள்” என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *