அரியலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கங்கை கொண்ட சோழபுரம். 11 ஆம் நூற்றாண்டு முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை, கடல் கடந்து பரந்து விரிந்திருந்த சோழப்பேரரசின் தலைநகராக விளங்கியது. தஞ்சாவூர் பெரிய கோவிலைக்கட்டிய மாமன்னன். ராஐராஐ சோழனின் மகன் ராஜேந்திர சோழன். தனது ஆட்சிக்காலத்தில் ஆயிரம் வருடத்திற்கு முன் கங்கை வரை படையெடுத்து சென்று வடபுறத்து மன்னர்களை வெற்றிக்கொண்டதன் அடையாளமாக. கங்கை கொண்ட சோழபுரம் என்ற புதிய நகரை உருவாக்கி, தஞ்சாவூர் பெரிய கோவில் வடிவமைப்புடன் கூடிய. பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார். இக்கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 16.5 அடி உயரமும். 60 அடி சுற்றளவும் கொண்ட சிவலிங்கம் தான், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் என போற்றி வணங்கப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன், ஐநா சபையின் யுனஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.
கங்கை கொண்ட சோழபுரம் பிரகன்நாயகி உடனுறை பிரகதீஸ்வரர் கோவிலில், மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று இரவு 4 கால பூஜையுடன் மகா சிவாராத்திரி விழா நடைப்பெற்றது. முதல் கால பூஜை மாலை 7.30-க்கும், இரவு 2 -ம் கால பூஜை 10.30 மணிக்கும், நள்ளிரவு 3-ம் கால பூஜை 1.30 க்கும், இன்று அதிகாலை 4-ம் கால பூஜை 4.30 மணி அளவில் நடைப்பெற்றது. இந்த பூஜையில் இரவு முழுவதும் வெளி ஊர்களில், உள்ளூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மகா சிவாராத்திரி விழாவை முன்னிட்டு இரவு முழுவதும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. விழா ஏற்பாடுகளை கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுவினர், மற்றும் இந்துசமய அறநிலையத்துறையினர் இணைந்து செய்துள்ளனர்.