நம் நாட்டில் உள்ள சிவாலயங்களில் சனி பிரதோஷம் மகா பிரதோஷம் என அழைக்கப்படும் சிவபெருமான் விஷமருந்தி துயர் தீர்த்த காலம் ஒரு சனிக்கிழமை என்பதால் இந்த பிரதோஷம் சனி மகா பிரதோஷம் என பக்தர்களால் அழைக்கப்படும். இந்த பிரதோஷத்தன்று சிவாலயங்களுக்கு சென்று நந்தி பகவானையும் சிவனையும் தரிசனம் செய்து அபிஷேகம் ஆராதனைகளை கண்டுகளித்தால் நம்முடைய முன்னோர் செய்த பாவம் நாம் செய்த பாவம் அனைத்து நீங்கிநமக்கு அனைத்து நமது நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இந்த நிலையில் சனி மகா பிரதோஷம் பல மடங்கு சிறப்புடையதாகும்.அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் சனி மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக லிங்க வடிவில் வீற்றிருக்கும் மூலவருக்கு எதிரே உள்ள பிரம்மாண்டமான நந்தியம் பெருமானுக்கு 16 வகையான நறுமணப் பொருள்கள் கொண்டும் பால் தயிர் பன்னீர் மஞ்சள் இளநீர் தேன் விபூதி ஆகிய பொருட்களைக் கொண்டும் அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து மூலவரான வைத்தியநாத சுவாமிக்கும் அபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது திரண்டு இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து நந்தி பகவானுக்கு சர்வ அலங்காரம் நடைபெற்று . தீபா ஆராதனை கட்டப்பட்டது கோயில் சிவாச்சாரியார்கள் பூஜைகளை வெகு விமர்சையாக செய்திருந்தனர்.

இதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அபிஷேக பால் பிரசாதமாக வழங்கப்பட்டது. சனி மகா பிரதோஷ விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் சர்க்கரை அம்மாள் செயல் அலுவலர் முத்து மணிகண்டன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் செய்திருந்தனர். தொடர்ந்து சுவாமி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிரதோஷ விழாவை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.