
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக தலைமையாசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் அரசு நிதியுதவி பெறும் சமாரியா தூய யோவான் டயோசீசன் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு பிளஸ் 2 பயிலும் மாணவிகளுக்கு தலைமையாசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார் சிறப்பு வகுப்பு எடுத்துள்ளார்.
அப்போது அவர் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறுப்படுகிறது. மேலும், செல்போனிலும் அரட்டை அடிக்க முயன்றுள்ளார். இதனால், அச்சமடைந்த மாணவி தலைமையாசிரியர் குறித்து பெற்றோரிடம் கூறியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து மாணவியின் பெற்றோர், கிறிஸ்டோபர் ஜெயக்குமார் மீது பள்ளி நிர்வாகத்திடம் புகாரளித்தனர். இதனையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்த பள்ளி நிர்வாகம் காவல்நிலையத்திலும் புகார் அளித்துள்ளது.பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய தலைமையாசிரியர் தலைமறைவாகி உள்ளார்.