மதுரை கரும்பாலை மேல தெருவில் கழிவுநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையிலே பெருக்கெடுத்து ஓடுகிறது. மதுரை மாநகராட்சி சாத்தமங்கலம் கரும்பாலை மேலத் தெருவில், பல நாட்களாக சாலையில் செல்கின்ற கழிவுநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தெருவில் ஆறு போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், பகுதிகளில் கொசு உற்பத்தி ஏற்பட்டு ,பல நபர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக, சமூக ஆர்வலர்களும் அப்பகுதி மக்களும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சாலையில் துர்நாற்று வீசுவதால் அவ்வழியாக செல்ல பொதுமக்கள் அஞ்சுகின்றனர். இது குறித்து, மதுரை மாநகராட்சி சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவித்தும், சாலைகள் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரை சீரமைக்க ஆர்வம் காட்டியுள்ளன கூறப்படுகிறது. இது குறித்து, மதுரை மாநகராட்சி மேயர், ஆணையாளர், உதவி ஆணையாளர், சுகாதார அலுவலர் இப்பகுதியை பார்வையிட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவு நீரை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இல்லையேல், மதுரை அண்ணா பஸ் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட இப்பகுதி மக்கள் திட்டமிட்டுள்ளனர்.