• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

101 ஊஞ்சல்கள் அமைத்து உலக சாதனை

ByA.Tamilselvan

Oct 11, 2022

சவுத் இந்தியன் வங்கியின் ஏற்பாட்டில் நடந்த “ஒன்று கூடுவோம் ஊஞ்சல் ஆடுவோம்” என்ற மாபெரும் நிகழ்ச்சி உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொச்சி மரைன் டிரைவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் ஒரே இடத்தில் 101 ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டிருந்தன. சவுத் இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் முரளி ராமகிருஷ்ணன் மற்றும் செயல் துணைத் தலைவர் கே.தாமஸ் ஜோசப் ஆகியோர் உலக சாதனைப் புத்தகக் குழுவிடமிருந்து சான்றிதழைப் பெற்றனர். சியால் நிறுவனத்தின் முதன்மை அதிகாரி ஷாஜி டேனியல், நடிகை ஷீலு ஆபிரகாம், தொலைக்காட்சி நட்சத்திரம் சபீதா ஜார்ஜ், சவுத் இந்தின் வங்கியின் மனிதவளத்துறை தலைவர் டி. ஆன்டோ ஜார்ஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.