• Sat. Apr 27th, 2024

சூரிய ரகசியங்களை கண்டறிய சீன செயற்கைக் கோள்

ByA.Tamilselvan

Oct 11, 2022

சூரியனின் ரகசியங்களைக் கண்டறியும் வகையில் ஆய்வுக்கூடம் ஒன்றை சீனா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இத்தகவலை சீன வானொலி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளியை அடித்தளமாக கொண்ட முன்னேறிய சூரிய ஆய்வுக்கூடம் அக்டோபர் 9ஆம் நாள் ஞாயிறு காலை 7:43 மணிக்கு சீனாவின் வட மேற்கிலுள்ள ஜியூச்சுவான் செயற்கைக்கோள் ஏவு மையத்திலிருந்து லாங்மார்ச்-2டி ஏவூர்தி மூலம் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. சூரியனின் இரகசியங்களை கண்டறிவதில் சீனாவின் முயற்சிகள் இதன் மூலம் முன்னெடுத்துச் செல்லப்படும் என்று கூறப் பட்டுள்ளது. சூரிய ஒளிவீச்சு வெடிப்பு மற்றும் சூரிய ஒளிவட்ட வெளியேற்றத்துக்கும், சூரிய காந்த புலத்துக்கும் இடையேயான தொடர்புகள் உள்ளிட்டவை பற்றிய ஆய்வுக்காக செயல்படும் இந்த ஆய்வுக்கூடம், விண்வெளி வானிலை முன்னறிவிப்புக்கு ஆதரவான தரவுகளையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *