• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புளியங்குடியில் தொடர் கொள்ளையன் கைது!

Byஜெபராஜ்

Feb 12, 2022

புளியங்குடி மற்றும் கடையநல்லூர் பகுதிகளில் இரவு நேரங்களில் வீடு, கடைகள் மற்றும் கோயில் உண்டியலை உடைத்து சுமார் மூன்று மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்தது தொடர்பாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐபிஎஸ் மற்றும் புளியங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் ஆகியோர்களின் உத்தரவின்படி, கடையநல்லூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையில் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் குட்டி ராஜா, குற்றப்பிரிவு முதல் நிலை காவலர்கள் விஜய பாண்டியன், சிவ ராமகிருஷ்ணன், மதியழகன் மற்றும் சைபர் கிரைம் காவலர்கள் மனோஜ், ஜேஸ்வா. ஆகியோர் கொண்ட தனிப்படையினர், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி வீடியோ பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்!

11.2.2022ம் தேதி புளியங்குடி சிந்தாமணி பகுதியில் ரோட்டில் நடந்து சென்ற முருகன் என்பவரை அரிவாளை வைத்து மிரட்டி பணத்தை பறிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அரிவாளுடன் இருந்தவரை பிடித்து விசாரணை செய்ததில், புளியங்குடி பகளமுடையான் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தரேசன் மகன் சூரியகாந்தி ( 22) என்பதும், அவன் மீது 30 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதும், சுமார் மூன்று மாதங்களாக புளியங்குடி, கடையநல்லூர் பகுதிகளில் தொடர்ச்சியாக திருடியதை ஒப்புக்கொண்டான்.

மேலும் குற்றவாளி மீது புளியங்குடி காவல்நிலையம் கடையநல்லூர் காவல் நிலைய குற்ற
வழக்காக பதிவு செய்யப்பட்டு குற்றவாளியிடம் இருந்து திருடப்பட்ட களவு சொத்துக்களை கைப்பற்றி, அதிகாரிகளின் உத்தரவுபடி குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் குற்றவாளியை கண்டுபிடித்த புளியங்குடி உட்கோட்ட தனிப்படையினரை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பாராட்டுக்களை தெரிவித்தனர். தொடர் கொள்ளையில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் பிடித்ததால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.