• Sat. Apr 27th, 2024

புளியங்குடியில் கஞ்சா விற்றவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

Byஜெபராஜ்

Feb 16, 2022

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தொடர்ந்து கஞ்சா விற்று வந்த ஆறு நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்த புளியங்குடி போலீசார்.

தென்காசி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் புளியங்குடி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் புளியங்குடி காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மற்றும் சாம்பவர்வடகரை காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் கஞ்சா விற்பனை தடுப்பு சம்பந்தமாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்!

புளியங்குடி உட்கோட்டம் காவல் புளியங்குடி நிலைய சரகத்திற்கு உட்பட்ட சிந்தாமணி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த டிஎன்.புதுக்குடி செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த உலகநாதன் மகன் சுப்பிரமணியன் ( 22), மலையான்குளம் சிதம்பராபுரம் இந்திரா காலனி மாரியப்பன் மகன் கபில் குமார் ( 22), சங்கரன்கோவில் முஸ்லிம் 1ம் சலீம் மகன் முஹம்மது அலி 22, சங்கரன்கோவில் காந்தி நகர் 3வது தெரு சண்முகராஜ் மகன் காளிராஜ், முஸ்லிம் தெரு சலீம் மகன் முஹம்மது அலி, சங்கரன்கோவில் காயிதே மில்லத் தெரு பாதுஷாவின் மகன் ஷெரிப் (22),டிஎன் புதுக்குடி பால விநாயகர் கோவில் தெரு முத்துசாமி மகன் மணிகண்டன் ரவி (22 ) ஆகியோர் 2.2 .2022 அன்று கஞ்சா விற்றதாக கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் கஞ்சா விற்பதை கட்டுப்படுத்தும் விதமாக, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் அறிவுறுத்தலின்படியும், தென்காசி மாவட்ட ஆட்சியர் சுந்தர்ராஜ் உத்தரவின்படியும் கஞ்சா விற்ற ஆறு நபர்கள் மீதும் குண்டர் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு புளியங்குடி இன்ஸ்பெக்டர் ராஜாராம் பாளையங்கோட்டை மத்திய சிறையில் கஞ்சா விற்ற 6 பேரையும் அடைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *