• Fri. Sep 26th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!

Byவிஷா

Oct 19, 2023

செந்தில்பாலாஜி ஜாமீன் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜில் புழல் சிறையில் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, செந்தில் பாலாஜி ஜாமீன் ஜாமீன் கோரி இரு முறை மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதனை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறைத்துறை மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில், அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த சூழலில், உடல்நிலை பாதிப்பை கருத்தில்கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 15-ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 16-ஆம் தேதி, ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன். மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்த ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அமலாக்கத்துறை தரப்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர்எஸ் சுந்தரேசன் வாதிட்டார். செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.

இந்த நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கி உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவ காரணங்களை ஏற்க முடியாது எனக்கூறி ஜாமீன் வழங்க முடியாது என, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.