• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

தங்கம் விலை அதிரடி உயர்வு..!

Byவிஷா

Oct 20, 2023

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்திருப்பது நகைப் பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ.45,280-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.75 உயர்ந்து ரூ.5,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய தங்கம் விலை நிலவரம்
22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ரூ.44,680-க்கு விற்கப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை ரூ.25 உயர்ந்து ரூ.5,585-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ.77,500-க்கு விற்பனையாகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.77.50க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிலோ ரூ.500 குறைந்து ரூ.77,500-க்கு விற்பனையானது.