• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

செந்தில்பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம்..,புதிய அமைச்சர் யார்?

Byவிஷா

Jun 15, 2023

அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, புதிய அமைச்சர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
அ.தி.மு.க ஆட்சியில் கடந்த  2011 முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி.அச்சமயத்தில் போக்குவரத்துதுறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். இதனையடுத்து இந்த வழக்கு சமரசமாக செல்வதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து வழக்கானது முடித்து வைக்கப்பட்டது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து மீண்டும் விசாரணை நடத்தி இரண்டு மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை முதல் சோதனை மேற்கொண்டனர். பாதுகாப்பு பணியில் மத்திய பாதுகாப்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். 20மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடைபெற்று வந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக அமலாக்கத்துறையினர் தங்கள் வந்த வாகனத்திலேயே ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல்நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தனர். அப்போது செந்தில் பாலாஜிக்கு இசிஜி அளவு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி துன்புறுத்தப்பட்டிருப்பதாகவும், சுய நினைவுயின்றி இருப்பதாகவும்  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்வதாக அமலாக்கத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் சட்ட ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆய்தீர்வு துறை மற்றொரு அமைச்சருக்கு ஒதுக்கப்படவுள்ளது. புதிய அமைச்சர் நியமிக்கப்படாமல் அமைச்சர் பொறுப்பு மட்டும் மூத்த அமைச்சர்களுக்கு வழக்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் முதலமைச்சரே இந்த துறைகளை கவனிப்பார் என தெரிகிறது. அல்லது மூத்த அமைச்சராக கேஎன் நேரு, ஏ.வ.வேலு, ஐ.பெரியசாமி பெயர்களும் பட்டியலில் உள்ளது. இருந்த போதும் புதிய பொறுப்பை ஏற்கும் அமைச்சர் யார் என்ற தகவல் இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.