
பண மோசடி வழக்கு தொடர்பாக தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்கு பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சு வலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்கு பிறகு விரைவு அதிரடிப்படையின் குழு நிறுத்தப்பட்டது. இதனிடையே மருத்துவர்களின் அறிக்கை பிறகு அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி புறப்பட்டார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நீதிபதி அல்லி விசாரணை நடத்தினார். இதனையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் 28ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.
