• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சென்சேஷனல் இசையமைப்பாளரான அனிருத்

ByA.Tamilselvan

Oct 18, 2022

இளம் வயதிலேயே உலக போற்றும் இசையமைப்பாளராக இருக்கிறார். அனிருத். இசையின் மீது அவரது ஈடுபாடும். உழைப்பும் முண்ணனி நடிகளின் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் அவரை தேடி வருகின்றன. இந்தியன் 2, ஜெயிலர் படங்களுக்கு இசையமைக்கிறார் அனிருத் .. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமாரின் 62 வது படத்திற்கும் அனிருத் தான் இசையமைக்கிறார். மிக குறுகிய காலத்திலேயே ரஜினி, கமல் போன்ற உச்ச நடிகர்களின் படங்களுக்கு கூட இசையமைக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்து விட்டது.இவருடைய குரலுக்கு என்று ஒரு தனித்துவம் இருப்பதால் இவர் பாடும் அத்தனை பாடல்களுமே ஹிட் அடிப்பது மட்டுமல்லாமல் மில்லியன் வியூஸ்களை தாண்டி வருகிறது. ஆரம்ப காலத்தில் இவர் இசையமைக்கும் படங்களுக்கு மட்டுமே பாடிக் கொண்டிருந்த அனிருத் பின்பு யுவன் ஷங்கர் ராஜா, AR ரகுமான் இசையிலும் பாட ஆரம்பித்து விட்டார்.
இசையின் மீது தீரா ஆர்வம் கொண்ட அனிருத் தான் பாடும் பாடல்கள் எதற்குமே சம்பளம் வாங்குவது இல்லையாம். அனிருத் பாடும் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட் அடித்து மில்லியன் வியூஸ்களை அல்லுகிறது.. இதற்கு அவர் நினைத்தால் லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கலாம். ஆனால் அனிருத் சம்பளம் இல்லாமல் பாட்டு பாடி கொடுக்கிறார். அனிருத் இதுவரை 150 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.