நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இந்த நிலையில் தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு நேற்று பிறந்தநாள். திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவுகளை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர்.அதே போல் சின்னத்திரை பிரபலங்களும் கீர்த்தி சுரேஷுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் குமரன் நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து பிறந்தநாள் வாழ்த்தை கூறியுள்ளார்.