அதிமுக ஒன்றுபட வேண்டும் என்றும் அதிமுகவிலிருந்து வெளியேறியவர்கள், நீக்கப்பட்டவர்கள் இன்னமும் பத்து நாட்களுக்குள் மீண்டும் சேர்க்கப்பட வேண்டும் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் இன்று செப்டம்பர் 5ஆம் தேதி வெளிப்படையான பகிரங்க நிபந்தனை விதித்துள்ளார்.
அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் செங்கோட்டையன் கொடுத்த இந்த பேட்டி பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அதிமுக நிர்வாகிகள் வெளிப்படையாக கருத்து தெரிவிக்க தயங்குகிறார்கள்.
இன்று செப்டம்பர் 5 மதுரையில் கப்பலோட்டிய தமிழன் செக்கிழுத்த செம்மல் வ. உ. சிதம்பரனார் பிறந்த நாளை ஒட்டி மதுரையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து வழங்கினார் முன்னாள் அமைச்சரும் மதுரை அதிமுக மாவட்ட செயலாளர் ஆன செல்லூர் ராஜு.
சிதம்பரனாரின் தியாகங்கள் பற்றி பேசிய செல்லூர் ராஜுவிடம் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்து இருக்கிற நிபந்தனைகள் பற்றி செய்தியாளர்கள் சரமாரியாக கேள்வி கேட்டனர்.
“இன்றைக்கு சிதம்பரனாரின் தியாகத்தை பற்றி மட்டும் பேசுவோம். அரசியல் பத்தி எல்லாம் நாளைக்கு பேசிக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே நழுவி விட்டார் செல்லூர் ராஜு.













; ?>)
; ?>)
; ?>)