• Mon. Apr 28th, 2025

செய்தியாளர்களின் கேள்விக்கு, செங்கோட்டையன் பதில் மெளனம் மட்டுமே..,

BySeenu

Apr 9, 2025

செங்கோட்டையன் கோவை விமான நிலையம் வருகை தந்தார். பா.ஜ.க – அ.தி.மு.க கூட்டணி விவகாரம் தொடர்பாக, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மோதல் தொடர்பாக, தமிழ்நாடு அரசியல் களம் தொடர்பாக பொதுவெளியில் எதுவும் சொல்லாமல் மறுத்து வருகின்றார்.

மெளனம் மட்டுமே பதில். பத்திரிகையாளர்களின் எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல், வணக்கம் மட்டுமே சொல்லி, சிரித்துக் கொண்டே செங்கோட்டையன் காரில் ஏறி கிளம்பினார்.

கட்சி தலைமையின் மீது முற்றும் பகைமை. செங்கோட்டையன் ஏறி சென்ற காரில் அ.தி.மு.க தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றப்பட்டு இருந்தன.

பொதுவாக கட்சி பிரமுகர்களின் காரில் டேஸ்போர்டில், முன் பகுதியில் சொந்த கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கும்

இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் ஏறி சென்ற காரில் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட எந்த படமும் இடம் பெறவில்லை.