• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கோவை உக்கடம் தாஜ் டவரில் “சொந்த காலில் பெண்கள்” எனும் கருத்தரங்கம்

BySeenu

Jul 30, 2024

இந்திய அனைத்து ஆடைகள் நல அமைப்பு, திராவிட நட்புக் கழகம், ஷிரின் பவுண்டேஷன் இணைந்து பெண் தொழில் முனைவோருக்கான சொந்தக்காலில் பெண்கள் என்ற கருத்தரங்கம் உக்கடம் தாஜ் டவரில் நடைபெற்றது.

ஷிரின் பவுண்டேஷன் நிறுவன தலைவர் டாக்டர் ஜி முகமது ரஃபீக் தலைமையில் நடைபெற்ற இதில் திராவிட நட்பு கழகத்தின் தலைவர் சிங்கராயர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

இதில் சிறப்பு விருந்தினராக ,தமிழ்நாடு அரசு சமூக நீதி கண்காணிப்பு குழு தலைவர்
பேராசிரியர் சுப. வீரபாண்டியன் கலந்து கொண்டு, பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் வழங்கி கருத்துரை ஆற்றினார் .

இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி மத்திய மண்டல தலைவர் மீனா லோகு,மேற்கு மண்டல தலைவர் தெய்வானை தமிழ்மறை,கல்வி குழு தலைவர் நா. மாலதி,திராவிடர் நட்பு கழகத்ரதின் பொதுச் செயலாளர் சிற்பி. செல்வராசு மற்றும் கா. சு. நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பெண்களுக்கான தன்னம்பிக்கை சார்ந்து உரையாற்றினார்கள்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய,முகம்மது ரபீக்,பெண்களை சுய தொழில் முனைவோர்களாக ஆக்கும் தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தும் விதமாக பெண்களுக்கு இந்த மையத்தில் பயிற்சிகள் வழங்கி பெண் தொழில் முனைவோர்களை உருவாக்குவதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் பெண்கள் சார்ந்த முன்னேற்றத்தின் தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் இது போன்ற அமைப்புகளின் செயல்பாடுகளை பாராட்டுவதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியில், தொழிற்சங்க கூட்டமைப்பு, அமுதம் மகேஷ் சமூக நீதிக் கூட்டமைப்பு, அருள் தாஸ் திராவிட இயக்க தமிழர் பேரவை கோவிந்தராஜ், திறன் மேம்பாட்டு பயிற்சியாளர்கள் சிவகாமசுந்தரி, கலையரசி,உட்பட தொழிற்சங்க கூட்டமைப்பினர் பலர் கலந்து கொண்டனர்..