இன்று 31/08/ 2024 சிவகங்கை நகர் உழவர் சந்தை அருகில் பொது கழிப்பறை கட்டுவதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தினை நமது நகர் மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் ஆய்வு செய்து பார்வையிட்டார்கள். அப்போது உடன் நகராட்சி ஆணையாளர், மேலாளர், சுகாதார அலுவலர், மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜெயகாந்தன், ராமதாஸ் மற்றும் ஜெயக்குமார், வட்ட பிரதிநிதி கணேசன், ஒப்பந்தகார் கண்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.











