

தமிழகத்தில் தி மு க ஆட்சி பொறுப்பேற்றது முதல் குமரி மாவட்டத்தில் அறநிலையத் துறையின் கீழ் உள்ள 490 சின்னதும்,பெரியதுமாக கோவில்கள் உள்ளது.
அதிமுக ஆட்சி காலத்து அறநிலையத்துறை அமைப்பு அகற்ற பட்ட நிலையில், கடந்த 2_ஆண்டுகளாக திமுகவினர் மத்தியில் பலரும் அறங்காவலர் குழு தலைவர் , உறுப்பினர்கள் ஆவதற்கு பலரும் பெரும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் சுசீந்திரம் தலைமை அலுவலகத்தில் தமிழக அரசு புதிதாக அறங்காவலர் உறுப்பினர்களை தேர்வு செய்தது.
இருளப்பபுரத்தை சேர்ந்த பிரபா ராமகிருஷ்ணன், சீதப்பாலை சேர்ந்த ராஜேஷ், இடைக்கோட்டை சேர்ந்த ஜோதிஷ்குமார், கொல்லங்கோட்டை சேர்ந்த துளசிதரன், தோவாளையை சேர்ந்த சுந்தரி ஆகியோர் தேர்வு செய்ய பட்டார்கள்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட அறக்கட்டளைகள் உறுப்பினர்கள் பதவியேற்பு விழா குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகம் சுசீந்திரம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்வுக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தலைமையில் அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவரான பிரபா ராமகிருஷ்ணன் ஏனைய உறுப்பினர்கள் வாக்களித்து அறங்காவலர் குழு தலைவராக தேர்வு செய்தனர். இதுவரை தக்காராக பெறுப்பேற்று வந்த நெல்லை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி அவரது தக்கார் பொறுப்பினை புதிதாக நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தார்.
நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர் மகேஷ், குமரி மாவட்ட அறங்காவலர்கள் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிரபா ராமகிருஷ்ணனை அவரது அலுவலக தலைவர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்தும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் திமுக மீனவர் அணி துணைச்செயலாளர் பசலியான், இணை ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், அகஸ்தீஸ்வரம் திமுக ஒன்றிய செயலாளர் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

