• Tue. Apr 7th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

கோவை மாவட்டத்தில் புகையிலை பொருள்கள் பறிமுதல்… விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது …

BySeenu

Nov 30, 2023

சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று (30.11.2023) பேரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தனிப்படை காவல்துறையினர் பேரூர் to வேடப்பட்டி சாலை அருகே வாகன தணிக்கை செய்த போது வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் குமரேசன்(47) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.50,000/- மதிப்புள்ள 51.342 கிலோ கிராம் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல்துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 638 நபர்கள் மீது 621 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 5804.372 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

இது போன்ற தகவல்களை காவல்துறைக்கு தெரிவிக்க பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். குற்றங்களை தடுத்திட தயங்காமல் அழைத்திடுங்கள்!!! காவல் கட்டுப்பாட்டு அறை எண்: 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண்: 77081-00100 மேற்கண்ட எண்ணையை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.