• Sat. May 23rd, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

மதுக்கரை விநாயகர் கோயில் வீதியில், காட்டு யானை உலா வரும் வீடியோ காட்சிகள்…

BySeenu

Nov 30, 2023

கோவை, மதுக்கரை விநாயகர் கோயில் விதியில் நீர் பருகிய யானை நடந்து சென்ற நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மதுக்கரை வனச்சரக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த ஒற்றைக் காட்டு யானை டிரமில் இருந்த தண்ணீரை பருகி விட்டு அங்கேயே சிறிது நேரம் நின்றது.

பின்னர் யானை மெல்ல நடந்து விநாயகர் கோயில் வீதியில் இருந்து அடுத்து ஊருக்குள் நுழைய முற்படும் பொழுது விரைந்து வந்த வனத்துறை பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஒற்றை காட்டு யானையை மதுக்கரையில் அடர் வனத்துக்குள் விரட்டினர்.

காட்டுக்குள் யானை விரட்டப்பட்ட நிலையில் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர். மேலும் பொதுமக்கள் இரவு நேரத்தில், வனப்பகுதியை ஒட்டி வசிப்பவர்கள் யாரும் வெளியே வந்து உலாவ வேண்டாம் என வனதுறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.